நம் உடம்பே தேவனின் ஆலயம் என்றும்,
கண்களின் ஒளியை பெருக்குவதே, நம் உள்ளிருக்கும் இறைவனை அடைய வழி என்பதற்கு புனித பைபிளில் இருந்து ஆதாரங்கள் மிக உள்ளன.
கண்களின் ஒளியை பெருக்குவதே, நம் உள்ளிருக்கும் இறைவனை அடைய வழி என்பதற்கு புனித பைபிளில் இருந்து ஆதாரங்கள் மிக உள்ளன.
இறைவன் நம்முள்ளே தான் இருக்கிறார். ஆனால் - " இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி எங்கெங்கோ அலைகிறார் ஞானப்பெண்ணே! " என்ற கூற்றின்படி பேதை மனிதர் இறைவனை நம் உள் தேடுவதை விட்டு விட்டு உலகமெல்லாம் தேடித் தேடி இறுதியில் அவரை அடையாமல் இறந்து விடுகின்றனர். பரிதாபம்!
கடவுள் நம்மை கோவில் கட்டி வழிபடச் சொல்லவில்லை..
மதத்தலைவர்கள் தங்கள் வருமானத்திற்காக அதை செய்தனர்.
இறைவன் பைபிளில் கூறுவதை பாருங்கள் :-
மதத்தலைவர்கள் தங்கள் வருமானத்திற்காக அதை செய்தனர்.
இறைவன் பைபிளில் கூறுவதை பாருங்கள் :-
" விண்ணகம் என் அரியணை;மண்ணகம் என் கால்மணை;அவ்வாறிருக்க எத்தகைய கோவிலை நீங்கள் எனக்காக கட்டவிருக்கிறீர்கள்? "
--- எசயா 66: 1
--- எசயா 66: 1
" உன்னத கடவுளோ மனிதர் கையால் கட்டிய இல்லங்களில் குடியிருப்பதில்லை "
--- திருத்தூதர் பணிகள் 7: 48
--- திருத்தூதர் பணிகள் 7: 48
எனவே கடவுள், மனிதர் கட்டிய கோவில்களில் குடியிருப்பதில்லை.
இதை அவரே கூறியுள்ளார்.
பின் அவரை எங்கே தேடுவது?
அதையும் கடவுளே கூறியுள்ளார்!
" நீங்கள் கடவுளுடைய கோவிலென்றும், கடவுளின் ஆவியார் உங்களில் குடியிருக்கிறார் என்றும் உங்களுக்குத் தெரியாதா? ஒருவர் கடவுளின் கோவிலை அழித்தால் கடவுள் அவரை அழித்து விடுவார்.ஏனெனில் கடவுளின் கோவில் தூயது.நீங்களே அக்கோவில். "
--- 1 கொரிந்தியர்
--- 1 கொரிந்தியர்
இந்த கோவிலாகிய நம் உடம்பு தூயது என்றும் இங்கே தான் கடவுள் தங்கியுள்ளார் என்றும் அவரே கூறிவிட்டார்.
இப்போது இந்த கோவிலாகிய நம் உடம்பை நாம் பரிசுத்தமாக வைக்கவேண்டாமா?
அசுத்தமான உணவுகளை உண்பதால் நாம் நம் உடம்பை அசுத்தப்படுத்துகிறோம் என்றும் நமக்கு தெரிய வேண்டும்.
கடவுள், கோவிலென்று நினைத்து, நாம் கட்டிய கட்டிடங்களில் இல்லை.
அவர் கட்டிய கோவிலே - மனித உடம்பு.
இந்த உடம்பில் இறைவன் எங்கு மறைந்துள்ளார் என்றும் அவரே கூறியுள்ளார்.
அவர் கட்டிய கோவிலே - மனித உடம்பு.
இந்த உடம்பில் இறைவன் எங்கு மறைந்துள்ளார் என்றும் அவரே கூறியுள்ளார்.
எல்லாம் அவர் கூறியுள்ளார்.
அதை படிக்காமல்,புரிந்து கொள்ளாமல் வீணே வெளியில் யார்யாரோ கூறுவதை பணம் செலவழித்து தவறாக புரிந்து கொள்ளும் பரிதாப நிலை!!
அதை படிக்காமல்,புரிந்து கொள்ளாமல் வீணே வெளியில் யார்யாரோ கூறுவதை பணம் செலவழித்து தவறாக புரிந்து கொள்ளும் பரிதாப நிலை!!
" வாழும் கடவுளின் கோவில் நாமே.என்உறைவிடத்தை அவர்கள் நடுவில் நிறுத்துவேன்."
--- 2 கொரிந்தியர் 6: 16
--- 2 கொரிந்தியர் 6: 16
" இறையாட்சி உங்கள் நடுவிலேயே செயல்படுகிறது "
--- லூக்கா 17: 21
--- லூக்கா 17: 21
நம் நடுவிலே - என்றால் நமது சிரசின் மத்தியில் என்று அர்த்தம். எண்சாண் உடம்பிற்கு சிரசே பிரதானம்.
அந்த சிரசின் மத்தியில் இறைவன் ஒளியாக வீற்றிருக்கிறார்!!
அந்த சிரசின் மத்தியில் இறைவன் ஒளியாக வீற்றிருக்கிறார்!!
அவரை அடைய, தரிசிக்க, வாசலாகிய கண்கள் வழியாக உள்ளே செல்ல வேண்டும்.
ஏன் கண்கள் வழியாக?
இதற்கும் பைபிள் ஆதாரம் உள்ளதா?
ஆம் உள்ளது.படியுங்கள்.
" எங்கிருந்து வருகிறது ஞானம்? எங்குள்ளது அறிவின் உறைவிடம்? வாழ்வோர் அனைவர்தம் கண்களுக்குள் ஒளிந்துள்ளது. "
--- யோபு 29: 20, 21
--- யோபு 29: 20, 21
" ஒளி உறைவிடத்திற்கு வழி எதுவோ! அதனுறைவிடத்திற்கு நேர்வழி அறிவாயோ! ஒளி தோன்றும் இடத்திற்கு பாதை ஏது? "
--- யோபு: 38: 19,20,24
--- யோபு: 38: 19,20,24
ஒளியாகிய இறைவனின் உறைவிடம் நம் சிரசின் மத்தி.
அதன் நேர் வழியே நம் கண்கள்!!
அதன் நேர் வழியே நம் கண்கள்!!
" ஆண்டவர் மனிதருக்கு தந்துள்ள ஆவி ஒரு விளக்கு"
--- நீதி மொழிகள் 20: 27
--- நீதி மொழிகள் 20: 27
இப்போது,உண்மையான ஆலயமும்,அதில் இறைவனின் இருப்பிடமும், அந்த வீட்டிற்கு வாசல் நம் கண்களே என்றும் இறைவனே பைபிளில் அறிவித்ததை கண்டோம்.
இனி,கண்களாகிய இந்த வாசலில் எவ்வாறு உள்ளே நுழைய வேண்டும் என பைபிள் கூறுகிறது என்று பார்ப்போம்.
"ஞானம் ஒளி மிக்கது. மங்காதது. வைகையில் அதை தேடுவோர் தளர்ச்சி அடைய மாட்டார்கள்.ஏனெனில் தம் கதவு அருகில் ( கதவு என்றால் கண்கள் என்று அறிக) அது அமர்ந்து இருப்பதை அவர்கள் காண்பார்கள். அதன் மீது மனத்தை செலுத்துவதே ஞானத்தின் நிறைவு.அதன் பொருட்டு விழிப்பாய் இருப்போர் கவலையிலிருந்து விரைவில் விடுபடுவர்.
--- சாலமோனின் ஞானம் -
6: 12,14,15
--- சாலமோனின் ஞானம் -
6: 12,14,15
ஞானம் கண்களாகிய வாசலின் அருகே அமர்ந்துள்ளது!!
அதன் மீது...கண்களில் உள்ள ஒளி மீது மனதை செலுத்துவதே ஞானத்தின் நிறைவு என இறைவன் கூறுகிறார்.
அதன் மீது...கண்களில் உள்ள ஒளி மீது மனதை செலுத்துவதே ஞானத்தின் நிறைவு என இறைவன் கூறுகிறார்.
மனம் திரும்பு, மோட்ச ராட்சியம் அருகே உள்ளது என்றார் இயேசு கிறிஸ்து.
மனம் என்பது சதா காலம் கண்கள் வழியாக வெளியே சஞ்சரிகிகின்றது.
அதை அதே கண்கள் வழியாக உள் முகமாய் திருப்பினால் அங்கே காணலாம் மோட்ச ராட்சியத்தை!
"இடுக்கமான வாயிலின் வழியே நுழையுங்கள். வாழ்வுக்குச் செல்லும் வாயில் மிகவும் இடுக்கமானது.வழியும் மிகக் குறுகலானது.இதைக் கண்டுபிடிப்போர் சிலரே"
--- மத்தேயு 7: 13,14
--- மத்தேயு 7: 13,14
இந்த இடுக்கமான வாயிலே நம் கண்கள்.
"வைகறையில் உமக்காக வழிமேல் விழி வைத்து காத்திருப்பேன்"
-- திருப்பாடல்கள் 5: 3
-- திருப்பாடல்கள் 5: 3
இவ்வாறு கண்கள் வழியாக நாம் குரு முகாந்திரம் தீட்சை பெற்று தவம் செய்யும் போது கண்கள் திறந்து இருக்க வேண்டும்.
" கண்ணை மூடிக் கொண்டிருப்போர் முறைகேடானதை சிந்திப்பர் "
---நீதி மொழிகள் 16: 30
---நீதி மொழிகள் 16: 30
கண் திறந்து தவம் செய்யும் போது கண்கள் ஆறாக கண்ணீர் சொரியும்.
"இரவும் பகலும் வெள்ளமென கண்ணீர் பொழி! உனக்கு ஒய்வு வேண்டாம்.கண்ணீர் விடாமல் நீ இருக்க வேண்டாம்"
--- புலம்பல் 2: 18
--- புலம்பல் 2: 18
" வற்றாத ஓடையென என் கண்கள் நீர் சொரிகின்றன.ஆண்டவர் வானினின்று கண்ணோக்கும் வரை ஓய்வின்றி கண்ணீர் சொரிகின்றன "
---புலம்பல் 3: 49,50
---புலம்பல் 3: 49,50
"விழித்திருந்து (விழி - திறந்திருந்து) இறைவனிடம் வேண்டுங்கள்"
---மத்தேயு 26: 41
---மத்தேயு 26: 41
"நீ அவர்களை இருளிலிருந்து ஒளிக்கும், சாத்தானின் அதிகாரத்திலிருந்து கடவுளிடத்துக்கும் திரும்புமாறு அவர்கள் கண்களை திறக்க வேண்டும்"
---திருத்தூதர் பணிகள் 26: 18
---திருத்தூதர் பணிகள் 26: 18
இந்த கண்களை திறந்து தருவதே ஞான குருவின் இறைப்பணி.
நன்றி - எட்வர்ட்www.vallalyaar.com