ஏதோ ஒரு ஆன்ம உந்துதல்.எதையோ தேடுகிறார்கள்.ஆனால் எதைத்தான் தேடுகிறோம் என்ற தீர்க்கமான தெளிவு பெரும்பான்மையானவர்களுக்கு இருப்பதில்லை!ஜீவன்- மும்மல பந்தத்திலிருந்தும், அஞ்ஞான தத்துவங்களிலிருந்தும்,சஞ்சித, பிராப்த கர்ம கட்டுகளிலிருந்தும் விடுதலை பெற்று சுதந்திர பேரானந்தத்தில் நிலைத்திருக்கவே விரும்புகிறது.அதுவே ஆன்மாவின் இயற்கை நிலை!அதற்கு நாம் என்ன செய்ய வேண்டும், யாரிடம் போக வேண்டும் என்ற தெளிவு இல்லாமல் தவிக்கும் ஜீவர்களை,வேடன் புறாக்கூட்டத்தை வலையில் பிடிப்பது போல "போலி குருக்கள்" இவர்களை மயக்கி,தானும் அழிந்து இவர்களையும் அழித்து விடுகின்றனர்.இந்த போலி குருக்கள் பணத்திற்கும் சொகுசு வாழ்க்கைக்கும் ஆசைப்பட்டு,சில தத்துவங்களை நன்றாக கற்றுக்கொண்டு,குண்டலினி, வாசி, என்று பேச்சுத்திறமையை வளர்த்துக் கொண்டு அப்பாவி மக்களை ஏமாற்றி பணம் பறித்து பெரிய ஆசிரமங்கள் அமைத்து சுகபோகமாக வாழ்ந்து இறுதியில் நரகமே செல்கின்றனர்.இதைப்பற்றிய எச்சரிக்கையை ஞானிகள் நமக்கு தெளிவாக உணர்த்தியதை பார்க்கலாம்: ------"கண்ணை அறியாத, கண்மணி ஒளியை - திருவடியை - அறியாத மூடர்கள் உபதேசத்தால் - கண்ணை மூடி தியானம் செய்து ஏமாந்து போவர்"---ஞான சற்குரு சிவசெல்வராஜ் ஐயா (திருவருட்பாமாலை)" தவறாக பொருள் கொண்டு மூக்கை பார்த்து மூச்சை அடக்கி மோசம் போவார் பலர். போலி குருக்களால் மூச்சுப்பயிற்சி செய்து மோசம் போகாதீர்கள் "" பற்பல சமயவாதிகள் இறைவனை அறியாமல் உணராமல் ஏதோ தனக்குத்தான் எல்லாம் தெரியும் என்பதுபோல கண்டபடி பிதற்றுகிறார்கள். நேரம் போகாத வீணர்கள் கை தட்டி ரசிப்பர். இறைவனைப்பற்றி ஞானமில்லாதவர்கள் பேசும் பேச்செல்லாம் வீண். எட்டும் இரண்டும் அறியா மூடர்கள். "-----ஞான சற்குரு சிவசெல்வராஜ் ஐயா (மந்திர மணி மாலை)" குருட்டினை நீக்குங் குருவினைக் கொள்ளார், குருட்டினை நீக்காக் குருவினைக் கொள்வர்.;குருடுங் குருடுங் குருட்டாட்டமாடிக், குருடுங் குருடுங் குழிவிழு மாறே."-----திருமந்திரம்போலி குருக்களை பற்றி இயேசு கிறிஸ்து கூறுவது :-----"அவர்கள் குருட்டு வழிகாட்டிகள். பார்வையற்ற ஒருவர் பார்வையற்ற வேறொருவரை வழிநடத்தினால் இருவரும் குழியில் விழுவர்." -----மத்தேயு 15: 14திருமந்திரமும் பைபிளும் ஒரே வசனத்தை கூறுவது ஆச்சரியமளிக்கிறது!!இதுவே,ஞானிகள் மதம் கடந்த உண்மையையே கூறுவார்கள் என்பதற்கு ஒரு சான்று!" வெளிவேடக்கார மறைநூல் அறிஞரே, பரிசேயரே, ஐயோ! உங்களுக்கு கேடு!மக்கள் நுழையாதவாறு அவர்கள் முன்பாக விண்ணக வாயிலை அடைத்து விடுகிறீர்கள்;நீங்கள் நுழைவதில்லை. நுழைவோரையும் விடுவதில்லை "-----மத்தேயு 23: 13(விண்ணக வாயிலே நம் கண்கள்.)" ஒருவரையாவது உங்கள் சமயத்தில் சேர்ப்பதற்கு, நாடு என்றும் கடல் என்றும் பாராது சுற்றி அலைகின்றீர்கள்;அவ்வாறு சேர்த்த பின் அவரை உங்களைவிட இருமடங்கு நரகத்தண்டனைக்கு ஆளாக்குகிறீர்கள்."-----மத்தேயு 23: 15எதிர்காலத்தில் மதத்தை பரப்ப ஆங்கிலேயரும், போர்த்துகீசியரும் நாடு என்றும் கடல் என்றும் பாராமல் உலகை சுற்றி மக்களை மதம் மாற்றுவார்கள் என்பதையும், அது தவறு என்பதையும் 2000 வருடங்களுக்கு முன்பே இயேசு கிறிஸ்துவின் சீடர் புனித மத்தேயு எவ்வளவு அழகாக கூறியுள்ளார்.சாடியுள்ளார்!இதில் ஒரு விஷயம் - இது எல்லா மதத்திற்கும் பொருந்தும்.அந்த ஞானி மத்தேயுவின் வார்த்தைகளை உன்னித்து கவனித்தால், சமயத்தில்(மதத்தில்),அது எந்த மதமாயிருந்தாலும், ஒளிநிலை அடைய வாய்ப்பே இல்லை என்பது தெளிவாகிறது!மதம் கடந்ததே ஞானம்!கவர்சிப்பேச்சில் மயங்கி போலி குருக்களிடம் ஏமாறாமல் கவனமாயிருங்கள். நன்றி - எட்வர்ட்
No comments:
Post a Comment